துரோகி டக்ளஸிடம் சரணடையும் கூட்டமைப்பு?

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் உள்ளூராட்சிசபைகளில் சிக்கலில்லாமல் நிர்வாகத்தை நடத்த ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியிடம் உத்தியோகபூர்வ பேச்சை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் ரெலோ இந்த பேச்சை ஆரம்பித்துள்ளது. இதன்படி இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறிகாந்தா ஆகியோர், ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சபைகளில், ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி வெளியிலிருந்து ஆதரவளிக்க வேண்டுமென இதில் கோரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக, கூட்டமைப்பு சார்பில் ரெலோ இந்த பேச்சில் கலந்து கொள்வதென, கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மன்னாரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சியமைப்பதில் ஏற்பட்ட சிக்கலையடுத்து, ஒட்டுக்குழு ஈ.பி.டி.பியின் ஆதரவு தவிர்க்க முடியாமல் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு ஏற்பட்பட்டுள்ளது. வெளி ஆதரவை பெறாவிட்டால், ரிசாட் பதியுதீன் அந்த சபையை கைப்பற்றிவிடுவார். இந்த நெருக்கடியையடுத்து, ரெலோ இந்த சமரச பேச்சிற்காக களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் யாழ் மாநகரசபை விவகாரமும் ஆராயப்பட்டது.

ரெலோவின் நிலைப்பாடுகளை கேட்ட ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, சில நிகந்தனைகளை ரெலோ ஊடாக தமிழரசுக்கட்சிக்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த நிபந்தனைகளிற்கு கூட்டமைப்பு எப்படி பதில் வழங்குகிறதென்பதை பொறுத்தே பேச்சு வெற்றியளிப்பது தங்கியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்