சிரியாவில் யுத்த நிறுத்தத்தை அறிவித்த கிளர்ச்சியாளர்கள்

சிரியாவில் அரச படைகளின் முற்றுகைக்கு கீழ் உள்ள கிழக்கு குவாத்தா பகுதியில் நிலை கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

ஐ.நா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்ததையின் பின்னரே அவர்கள் இந்த யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு குவாத்தா பகுதியை மீட்பதற்கான நடவடிக்கைகளை ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கு குவாத்தாவில் சுமார் 70 சதவீதமான பகுதிகளை கிளர்ச்சியாளர்களிடமிருந்த மீட்டுள்ளதாக சிரிய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் தற்போது கிழக்கு குவாத்தா நகரை 3 பகுதிகளாக பிரித்துள்ளதாகவும் அவர்கள் தெரவித்துள்ளனர்.

கடந்த 3 வாரங்களாக இடம்பெற்று வரும் இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை சுமார் 1000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கலாமென. பிர்த்தானியாவை தளமாக கெண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாமெனவும் குறித்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளதுடன், குறித்த பகுதிகளிலிலிருந்து அதிகளமான மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வெளியேறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கிழக்கு குவாத்தாவின் ஹரஸ்டா நகரிலிருக்கும் கிளர்சியாளர்கள் தங்களது ஆயுதங்களை களைந்து சரணடைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், அவர்களும் அவரது குடும்பங்களும் அந்நகரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்