படையினரின் வாக்குறுதி பொய்யானது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் வசமிருந்து ஆறு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்ட காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை. பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் அனைத்தும் விடுவிக்கவேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் தெரித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்பாக 682 வது படைப்பிரிவினது கட்டுப்பாட்டிலிருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு அதன் காணி உரிமையாளர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தக்காணிகளை விடுவிக்கமாறு மக்கள் தொடர்போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து ஒரு தொகுதி காணிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டன. அதாவது 28.02.2017 அன்றைய தினம் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகள் விடுவிப்பு தொடர்பில்முற்கட்டமாக 7.2 ஏக்கரும் இரண்டாம் கட்டமாக 10 ஏக்கரும் மீதமாகவுசுள்ள இரண்டு ஏக்கர் காணிகளையும் ஆறு மாத காலத்தில் விடுவப்பதாக படையினர் தெரிவித்திருந்தனர் என்றும் இதில் முதற்கட்ட காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது.

ஏனைய காணிகள் விடுவிக்கப்படவில்லை . ஆகவே பொதுமக்களுகு;குச்சொந்தமான காணிகளை விடுவிப்பததற்கு படையினர் இன்னமும் தயாரகவில்லை. போதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை படையினர் விடுவிக்கவேண்டுமென்று ரவிகரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறிய சிங்கள மீனவர்களில் ஒரு பகுதியினர்
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா விமானப்படையிரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கிகள் காணாமல் போயுள்ள

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*