சற்றுமுன் சாவகச்சேரியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் பலி! காணொளி

யாழ்.சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அல்லாலை வடக்குக் கொடிகாமத்தைச் சேர்ந்த சந்திரயோகலிங்கம் மயூரன் என்ற 27 வயதுடைய இளைஞரே பலியாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரைப் பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிகவிசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்