யேர்மனியில் நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய போட்டி – வாகைமயில் 2018

யேர்மனியில் நடனக் கலை பயில்வோருக்கு களம் அமைத்துக் கொடுத்து, அவர்களது திறமைகளை வெளிக் கொண்டு வரும் நோக்கில் நாடுதழுவிய ரீதியில் வாகைமயில் என்னும் மாபெரும் பரதநாட்டிய நடனப் போட்டி தமிழ் பெண்கள் அமைப்பினரால் ஒழங்கு செய்யபட்டு வெகு சிறப்பாக 24.03.18 அன்று என்னப்பெற்றால் நகரில் நடாத்தப்பட்டது.

வாகைமயில் நடனப்போட்டிகள் தெரிவுப்போட்டி இறுதிப்போட்டி என நடாத்தப்பட்டது. மாநில மட்டத்தில முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நாடுதழுவிய ரீதியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இந்த வகையில் 17.03.2018 எனனெப்பெற்றால் நகரிலும் 18.03.2018 ஸ்ருற்காட் நகரிலும் ஆரம்பமாகிய இப்போட்டிகளுக்கான இறுதி நிலைப் போட்டிகள் சென்ற 24.03.2018 என்னெபெற்றால் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்க் கலைக் கூடங்கள், மற்றும் நடனக் கலை பயில்வோர் தமது கலை ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கில் 250ற்கு மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இப்போட்டியில் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.
ஆரம்பப்பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு என வயதுப்பிரிவிற்கு ஏற்ப பிரிக்கப்பட்டு தனிநடனம், குழுநடனம், விடுhலை நடனம் என போட்டிகள் நடாத்தப்பட்டன. அத்துடன் நாட்டிய நாடகமும் போட்டி நிகழ்வாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகு சிறப்பாக நடைபெற்ற இம் மாபெரும் நடனப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதுகளும், அதிசிறந்த நடனக் கலைஞர்களுக்கு வயதுப்பிரிவுப்படி வாகைமயில் விருதும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

தொடர்டர்புடைய செய்திகள்
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு
வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் நடைபெற்றுள்ள இன ஆக்கிரமிப்பு அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்
14.4.2018 சனிக்கிழமை நடைபெற்ற 28 ஆவது ஆண்டுவிழா 120 தமிழாலயங்களிலும் ஊதியமின்றித் தன்னலமற்ற தூய பணியாற்றும் 1300 க்கு மேற்பட்ட

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*