வடக்கின் முக்கிய போர் நினைவுச் சின்னத்தை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம்

கிளிநொச்சி நகரில் அமைந்திருந்த நீர்த்தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்த்தாங்கியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பகுதியில் இருந்து நீர்த்தாங்கி ஒன்று 2000ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியும் இறுதி யுத்தத்தின்போது வீழ்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த நீர்த்தாங்கி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.இதேவேளை, இந்த நீர்த்தாங்கி தற்போது அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி
மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்