திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இறுதிக்கட்ட போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு முயன்றதாக மே பதினேழு இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகள் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நால்வரும் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்கள் நால்வரும் இன்றைய தினம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களின் விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்