தொடங்கியது தென்னிலங்கை மீனவர்களது படையெடுப்பு!

தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்று பகுதியில் ஒவ்வொருவரிடமும் சீசனுக்காக வந்து பலநூற்று படகுகளை வைத்து தொழில்செய்துவருவது தொடர்கதையாகியுள்ளது.

இம்முறையும் தற்போது வரை 60 படகுகள் வரை தொழிலுக்கு வந்துள்ளன.மேலும் மீன்பிடி படகுகள் வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனாலும் இம்முறை கூடிய அளவு தென்னிலங்கை மீனவர்களிற்கு அனுமதி வழங்கப்படாதென முல்லைதீவு கடற்றொழில் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே மீனவசங்கங்கள் எடுத்த தீர்மானத்துக்கமைய எவரையும் அங்கு தொழில் செய்ய அனுமதிக்க கூடாது என்ற நிலையில் தென்னிலங்கை படகுகள் வந்து சேர்ந்துள்ளன.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடப்படுவதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. இதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருநாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என அழைக்கப்படும் தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது.
இத்திட்டம் அமுலுக்குவருமிடத்து கரையோரப்பகுதிகள் முற்றாக தென்னிலங்கை மீனவர்கள் வசம் செல்லுமென நம்பப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்