சித்தார்த்தனின் முதுகில் குத்தியது தமிழரசு கட்சி!

வலிகாமம் தெற்கு பிரதேச சபைமேலதிக வாக்கெடுப்பில் புளொட் கட்சியைச் சேர்ந்த தர்சன் வெற்றி பெற்றுள்ளார்.

சுன்னாகம் பிரதேசசபை கதிரைகளை கைப்பற்ற கூட்டமைப்புக்குள் தமிழரசு நடத்தும் அரசியல் சித்து விளையாட்டில் புளொட் மற்றும் தமிழரசு கட்சிகள் சம வாய்ப்பினை பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து வெற்றியைத் தீர்மானிக்கும் திருவிளச்சீட்டு முறைக்கு உள்ளுராட்சி ஆணையாளர் சென்றுள்ளார்.
3ம் சுற்று வாக்கெடுப்பில் புளொட் – 12, தமிழரசு – 12 என சமபலத்திலுள்ளன. சுன்னாகம் பிரதேசசபையில் முதலில் நான்கு கட்சி போட்டியினில் முன்னணி – 06, ஜ.தே.க – 04 இடங்களையே பெறமுடிந்தது.

மொத்தமாக தமிழரசு கட்சி :- 12 ,ஈழமக்கள் ஜனநாயக கட்சி :- 07 ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் :- 04, தமிழர் விடுதலைக்கூட்டணி 02, ஐக்கிய தேசிய கட்சி :- 02,சிறீPலங்கா சுதந்திர கட்சி : 01 உறுப்பினர்களை கொண்டுள்ளன. அவ்வகையில் கூட்டமைப்பு தான் ஆட்சி அமைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது
முன்னதாக சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் தெரிவு இன்று நடைபெறவிருக்கும் நிலையில், பதவி ஆசை பிடித்த தமிழரசுக்கட்சி குழுவொன்று தவிசாளர் பதவியை பெற போட்ட சூழ்ச்சி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சித்தார்த்தன் தனது நெருக்கமான தரப்புக்களின் ஊடாக செய்திகளை கசியவிட்டார்.
சுன்னாகம் பிரதேசசபை தவிசாளராக புளொட் அமைப்பு தேர்வு செய்த ஒருவர் பிரேரிக்கப்படவிருந்த நிலையில், முன்னாள் தவிசாளரான தி.பிரகாஸ் தலைமையில் தமிழரசுக்கட்சியின் ஒரு குழு சூழ்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதையடுத்து, மாவை சேனாதிராசா தனது உதவியாளரான சுகிர்தனிடம் இந்த விவகாரத்தை தீவிரமானதாக எடுத்து, உடனடியாக தீர்க்குமாறு கூறியிருந்தார். நேற்றிரவு சூழ்ச்சி அணியை சேர்ந்தவர்கள் மார்ட்டின் வீதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி, பதவிக்காக இப்படியான சூழ்ச்சிகரமான செயலில் ஈடுபட்டால் உடனடியாக கட்சியை விட்டு நீக்கப்படுவீர்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தமிழரசு தகவல்களை கசியவிட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்