கூட்டமைப்பினர் எங்களை புனிதர்களாக்கிவிட்டனர்

“எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள்”

எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் எங்கள் மீது சுமத்திய குற்றசாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பது வெளிப்பட்டு உள்ளது என ஒட்டுக்குழுவான ஈபிடிபியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.கே.ஜெகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

எங்கள் மீது குற்றசாட்டுக்களை அடுக்கியவர்கள் இன்று எமது ஆதரவு வேண்டி நிற்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் எம் மீது குற்றசாட்டுக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் தான் சுமத்தினார்கள் என்பது வெளிவந்துள்ளது. எங்கள் மீதான குற்ற சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது.

அதேவேளை உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க நாம் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என தீர்மானித்து இருந்தோம்.

அதனால் கூட்டமைப்பினர் எங்களுடன் பேசி இருந்தார்கள். அதனால் நாங்கள் ஆதரவு வழங்கினோம். அதற்காக நாங்கள் அவர்களுடன் ஒருபோதும் கூட்டு சேர மாட்டோம். கூட்டமைப்புடன் கூட்டு சேர கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை நாம் எமது கட்சி கொள்கைகளை தான் முன்னெடுத்து செல்வோம்.

தீவகம் எமது இதய வாசல். நேற்று வேலணை பிரதேச சபையை கைப்பற்ற கூட்டமைப்பினர் முயன்றனர். இதய வாசலில் தொட முயற்சித்தால் நாம் விடமாட்டோம். அதனால் நாம் ஏற்கனவே தேசிய கட்சியான ஸ்ரீலங்கா பெரமுன கட்சியுடன் பேசி இருந்தோம். அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளோம்.

ஏனைய சபைகளில் ஆட்சி அமைக்க தமக்கு ஆதரவு தாருங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எம்மிடம் கோரவில்லை. அதனால் அவர்களுக்கு நாம் ஆதரவு வழங்க வில்லை. என தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ரணிலுக்கு ஆதரவு கோரும் சத்தியக் கடிதாசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைஒப்பமிட்டுள்ள நிலையில் தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும்
நாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனைய பெரும்பான்மையின கட்சிகள் தமது
நாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனைய பெரும்பான்மையின கட்சிகள் தமது

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*