விரக்தியில் கேப்பாபிலவு மக்கள்

சொந்த நிலத்­தில் வாழும் உரிமை மறுக்­க­பட்­டுள்­ளது. நாம் எதற்­குப் பிறந்­தோமோ அவை அனைத்­தும் இல்­லா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளன எனவே இனி­யும் போரா­டிப் பய­னில்லை. எனது பிற­விப் பாவங்­க­ளைப் போக்க இம­ய­மலை சென்று எனது வாழ்­வைக் கழிக்­க­வுள்­ளேன் என்று கேப்­பா­ பி­ல­வில் போரா­டும் மக்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக உள்ள ஆறு­மு­கம் வேலா­யு­தம் கவ­லை­யு­டன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது எமது நாடு என்று எல்­லோ­ரும் கூறு­ கின்­றார்­கள் அத­னு­டைய அர்த்­தம் எமக்கு விளங்­க­வில்லை. இங்கு பல­ரும் தங்­க­ளது உரி­மைக்­கான போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர். தமி­ழர் தாய­கம் எங்­கும் போராட்­டங்­கள் இடம்­பெ­று­கி­றது.

வீதி­க­ளிலே மக்­கள் போரா­டுகிறார்கள். அவர்­க­ளு­டைய வாழ்க்கை கடந்த ஒரு வரு­டங்­க­ளுக்கு மேலாக வீதி­க­ளி­லேயே கழிக்­கப்­ப­டு­கின்­றன. எமது மக்­கள் தங்­க­ளது இன்ப துன்­பங்­க­ளைத் துறந்து. உரி­மைக்­காக மட்­டுமே போரா­டு­கி­றார்­கள். ஆனால் எமது தலை­மை­க­ளாலோ, அல்­லது அர­சாலோ எமக்­கான தீர்­வு­கள் வழங்­கப்­ப­ட­வில்லை. நாம் கைவி­டப்­பட்­டுள்­ள­தா­கவே உணர்­கி­றோம். போராடும் அனை­வ­ரும் சாகும் வரை வீதி­க­ளி­ லேயே இருந்­து­வி­டு­வார்­களோ என்று எண்­ணத் தோன்­று­கின்­ற­னது.

தொடர்ச்­சி­யா­கப் போரா­டி­னோம், கேப்­பா­பி­ல­வில் உள்ள எங்­க­ளது காணி­களை பிடித்து வைத்­தி­ருக்­கும் இரா­ணு­வத்தை வெளி­யே­றக்­கோ­ரிய எமது போராட்­ட­மும் மழுங்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. புனி­தர்­கள் புதைக்­கப்­பட் டுள்ள எமது மயா­னங்­க­ளில் இரா­ணு­வம் குரங்­குக் கூத்­தா­டு­கி­றது. கேட்ப்­ப­தற்கு யாரும் இல்லை. கடந்த 5 நாள்­க­ளாக ஆன்மிக வழி­யில் போரா­டு­கி­றோம்.

இன்று அந்­தப் போராட்­டத்­தின் இறு­தி­நாள். இத­னு­டைய நிறை­வி­லும் எமது உரமை மறுக்­கப்­பட்­டால் நாம் வாழ்­வது பய­னற்­றது. எனவே இந்த மக்­க­ளை வழி­ந­டத்­திக் கொண்­டிப்­ப­வன் என்ற வகை­யில் நான் இந்த மண்­ணில் பிறந்த பாவங்­க­ளைப் போக்க இம­ய­ம­லைக்­குச் செல்­ல­வுள்­ளேன். அங்கு சென்று எமது மக்­க­ளுக்கு தீர்­வைப் பெற்­றுத்­த­ரு­மாறு ஆஞ்­ச­நே­ய­ரி­டம் மண்­டி­யி­டு­வேன் இது­தான் எனது இறுதி முடிவு என்­றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்