விடுதலைப் புலிகளின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் குணாளன் மாஸ்ரர் காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தொழில்நுட்ப பிரிவுப் பொறுப்பாளரும், தமிழீழ நிதர்சனப் பிரிவின் தொழில்நுட்ப வல்லுநருமான குணாளன் மாஸ்டர் 29.03.2018 சுவிஸ் நாட்டில் காலமானார்.

ஆரம்ப காலத்தில் சாவகச்சேரியுள்ள Teleconer என்னும் நிறுவனத்தில் இலத்திரனியல் தொழிநுட்பவியலாளராக கடமையாற்றிய இவர் 1983 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை தமிழீழ போராட்டத்தின் பல வரலாற்றுப் பதிவுளை காண்பொளியாக (video ) பதிவு செய்தார்.

தாயகத்தில் இலத்திரனியல் தொழிநுட்ப கலைக்கூடத்தை நிறுவி அங்கு பல போராளிகளை இலத்திரனியல் தொழிநுட்ப கலையில் பயிற்றுவித்தவர்.

சுவிஸ் நாட்டிற்குச் சென்றும் தனது இனத்திற்கு ஏற்பட்ட இன அழிப்பின் சாட்சியாக ஜெனீவா மனித உரிமைகள் மையத்திற்குச் சென்று தனது வாக்குறுதியை பதிவு செய்திருந்தார்.

தேச விடுதலை என்ற உன்னத குறிக்கோளுடன் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியொரு தேச விடுதலைப்பற்றாளன் தான் குணாளன் மாஸ்டர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்