சம்பந்தனுக்கு கடிதம் எழுதிய அத்துரலிய ரத்தன தேரர் !

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தனுக்கு இன்று சனிக்கிழமை (31.03.18) அத்துரலிய ரத்தன தேரர் அனுப்பி உள்ள அவசரக் கடிதத்தில், ‘ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று எதிர்பார்க்கின்றோம். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் என்பது வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம், உரியதன்று. எல்லா இலங்கையர்களினதும் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும். மோசமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும், ரணில் விக்கிமசிங்கவுக்கு, ஆதரவளித்தால் அது உங்களின் கட்சியின் புகழுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்