ஈபிடிபி மற்றும் ஜ.தே.கட்சியின் ஆதரவுடன் வலி.வடக்கில் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கிறது

யாழ்.வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளராக சே. சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கான முதலாவது சபை அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்றைய தினம் கூடியது.

அதன் போது தவிசாளராக தமிழ் தேசியகூட்டமைப்பின் சார்பில் சோ. சுகிர்தன் பிரேரிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தா. நிகேதன் பிரேரிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் சுகிர்தன் 30 வாக்குகளையும் நிகேதன் 06 வாக்குகளையும் பெற்றனர். தமிழர் விடுதலை கூட்டணியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்க வில்லை. அதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவின் போது கூட்டமைப்பு பிரேரித்த பொ. ராஜேந்திரம் போட்டியின்றி தெரிவு செய்யபட்டார்.

வலி.வடக்கில் தமிழரசு கட்சி 17 ஆசனங்களையும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 08 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 06 ஆசனங்களையும் , தமிழர் விடுதலை கூட்டணி 02 ஆசனங்களையும் . ஐக்கிய தேசிய கட்சி 02 ஆசனங்களையும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 04 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்