யாழில் கனடிய தம்பதி செய்த மோசமான செயற்பாடு அம்பலம்..!

கடந்த மாதம் 7 ஆம் திகதி யாழ். வறணியில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிசில் கனடிய தம்பதியினர் முறைப்பாடு செய்திருந்தனர்.

இவ்வாறு பொய்யான முறைப்பாட்டைச் செய்த குற்றத்தை கனடிய தம்பதிகள் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதன்மூலம் கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிவான் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நகை களவு போனதாக பொய் முறைப்பாடு செய்த தம்பதியும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

இதன்போதே நகைகள் களவு போனதாக பொய் முறைப்பாட்டினை மேற்கொண்ட குற்றத்தை நீதிமன்றில் கனேடிய தம்பதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான் அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எதிர்வரும் 23 ம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்