ஆயுதங்களுடன் அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!

அக்கரைப்பற்று – அளிகம்பை முகாம் கடை பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று – சாகாமம் அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதானவர் அக்கரைப்பற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்