சந்திரிகாவிடம் ஈ.பி.டி.பி கேட்ட அதே விசயத்தையே ஈ.பி.ஆர்.எல்.எவ் கேட்டனர்!

ரணில் விக்கிரமசிங்கவுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் நேற்று பேச்சு நடத்தியிருந்தது. தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை ரணிலிடம் வலியுறுத்தியதாக சுரேஷ் பிரேமச்சந்திரனும், சிவசக்தி ஆனந்தனும் வலியுறுத்தியதாக, சந்திப்பின் பின்னர் இருவரும் கூறியிருந்தார்கள்.

அவர்கள் கூறியது உண்மையா?

ஆம். உண்மைதான். ஆனால் அதைவிட வேறும் சில விசயங்கள் உள்ளன.

ரணில் விக்கிரமசிங்க பயங்கர நெருக்கடியில் இருக்கும் சமயத்தில், வாக்குறுதிகளை நிறைவேற்ற சரியான தருணம் இதுதான். இப்படியான சூழலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மட்டுமல்ல, தமிழரசுக்கட்சியும் வேறும் சில – தனக்கு தேவையான- சிலபல விசயங்களை கேட்டு பெற்றுக்கொள்வார்கள். தனியே அரசியல் கைதிகள் விசயத்தை மட்டும் கேட்க, ஈ.பி.ஆர்.எல்.எவ் அவ்வளவு பிழைக்க தெரியாத கட்சியா?

ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ன விசயங்களை ரணிலிடம் கேட்டார்கள் என்பதை சொல்வதற்கு முன்னர், வரலாற்றிலிருந்து ஒரு உதாரணத்தை சொல்கிறோம்.

1994 இல் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஒட்டுக்குழு ஈ.பி.டி.பிக்குள் ஒரு பிளவு நடந்தது.ராமேஸ்வரன்- ராமமூர்த்தி சகோதரர்கள் (அப்போது எம்.பியாக இருந்தனர்) கட்சியை விட்டு பிரிந்து சென்றனர். அவர்களை கட்சியை விட்டு நீக்கி, எம்.பி பதவிக்கு வேட்டு வைக்க டக்ளஸ் தேவானந்தா முயன்றார். அப்போதும் அரசியல் நெருக்கடியொன்றில் சந்திரிக்கா சிக்க, சகோதரர்களின் ஆதரவு அவருக்கு தேவைப்பட்டது. அப்போது சகோதரர்கள் வைத்த முக்கிய நிபந்தனை- எம்மை எம்.பி பதவியிலிருந்து நீக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கொடுத்த வாக்கை சந்திரிக்கா நீண்டகாலம் காப்பாற்றினார். ஆனால், ஒட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தாவின் அளவிற்கு மீறிய அழுத்தம் காரணமாக, பதவிக்காலம் முடிவதற்கு மூன்று வாரங்களின் முன்னர் நீதிமன்றத்தின் மூலம் அவர்கள் பதவியை இழந்தனர்.

இதே வரலாறு நேற்றும் திரும்பியிருக்கிறது என்பதை உறுதிசெய்துள்ளது. தமிழரசுக்கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவசக்தி ஆனந்தனின் எம்.பி பதவிக்கான உத்தரவாதத்தை, ஈ.பி.ஆர்.எல்.எவ் பெற்றிருக்கிறது. நீதிமன்ற நடவடிக்கைக்கு வாய்ப்பாக, பாராளுமன்றத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அரசியல்கைதிகள் விவகாரத்தையும் மிக சீரியசான ஈ.பி.ஆர்.எல்.எவ் பேசியிருக்கிறது. அதே சமயத்தில், கட்சிக்கு தேவையான இந்த விசயத்தையும் கேட்டு பெற்றிருக்கிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்