பருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு

பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.

இன்று பிற்பகல் இடம்பெற்ற பருத்தித்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வில், தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அ.சா. அரியகுமாரும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சார்பில், ஜெயபாலனும், தவிசாளர் பதவிக்குப் பிரேரிக்கப்பட்டு பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அ.சா. அரியகுமார் 13 வாக்குகளை பெற்று தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, ஜெயபாலனுக்கு 4 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 3 உறுப்பினர்கள், ஐதேக மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலா 1 உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் அரியகுமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, உப தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாலசிங்கம் தினேஸ் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
தனது மாணவனான மணிவண்ணன் தங்களுடன் இணைந்து அரசியல் செய்யாது தமக்கு எதிராக அரசியல் செய்வதால்தான் அவரை தாங்கள் அரசியலில் இருந்து
இலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலைக்கொள்ள இராணுவம் முயற்சிக்கின்றது. தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்