ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு!

ஈ.பி.டி.பி இன் கோட்டை எனப்படுகின்ற தீவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது.

1991ஆம் ஆண்டிற்கு பின்னர் நெடுந்தீவு பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சியைத் தகர்த்தெறிந்து அவ்விடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான முதலாவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இதில் தவிசாளர் தெரிவின் போது , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிலிப் பற்றிக் ரொஷானையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் நல்லதம்பி சசிக்குமாரையும் பிரேரித்தனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரேரித்த பிலிப் பற்றிக் ரொஷான் 7 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவானார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பிரேரித்த நல்லதம்பி சசிக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு சுயேட்சைக்குழுத் தலைவர் கேதீஸ்வரநாதனும், அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்ற அநீதிகளை வெளிக்கொணர முயற்சித்தமையினாலேயே ஊடவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் வாக்குகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாதிருந்த நிலையில் நிபந்தனைகள் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில்
மட்டக்களப்பில் இன்றைய தினம் (17) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலும், மக்கள் சந்திப்பும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்