சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்.சில்லையூரில் கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டுள்ளது!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சில்லையூர் HEFTY ENTERTAINMENT MEDIA மற்றும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் விளையாட்டுக் கழகம் இணைந்து கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தியுள்ளார்கள். இவ் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (திங்கள்) நடைபெற்றுள்ளது.

சண்டிலிப்பாய் இரட்டையபுலம் இளைஞர் கழகம் மற்றும் மாதகல் சென்.தோமஸ் ஐக்கிய விளையாட்டுக் கழகம் மோதிய பரபரப்பான இறுதிப்போட்டி நேற்று மாலை 6.00 மணியளவில் சில்லையூர் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இவ ; விளையாட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கௌரவ மாகாண சபை உறுப்பினர் திரு கஜதீபன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்திருந்தார்.

மாதகல் சென்.தோமஸ் ஐக்கிய விளையாட்டுக் கழகம் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வாகை சூடியது. எதிர்த்து விளையாடிய சண்டிலிப்பாய் இரட்டையபுலம் இளைஞர் கழகம்இரண்டாம் இடத்தையும் சில்லையூர் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் விளையாட்டுக் கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தாக்கது.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்