ஸ்பெயினில் தீவிரவாதிகள் தாக்குதல் 13 பேர் பலி – 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்பெயினில் இன்று நடத்தப்படவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றுத் திட்டமிட்ட ஐந்து பேர் கம்பிரில்ஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அந்த நாட்டுப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தாக்குதல்

ஸ்பெய்னின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது வாகனமொன்றால் மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.

ஸ்பெய்னின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலாப் பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே இந்தத் தாக்குதுல் நடத்தப்பட்டது. மக்கள் மீது வாகனத்தை மோதவிட்ட பின்னர் தாக்குதல்தாரி தப்பித்து ஓடி விட்டார் என்று பன்னாட்டு உடகங்கள் செய்தி வெளியிட்டன.

13 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டது.

தீவிரவாதத் தாக்குதல்

தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களில் இது தம்மால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். (ஈராக் சிரிய இஸ்லாமிக் ஸ்ரோட்) அமைப்பு அறிவித்தது. ஐ.எஸ்.ஐ.எஸ்.

அமைப்பு இதுபோன்ற பாணியில் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளதால் அந்த அமைப்பின் அறிவிப்பு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், ஸ்பெய்ன் பொலிஸார் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் தான் இது நடத்தப்பட்டது என்று நேற்று மதியம் வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் இது ஓர் தீவிரவாதத் தாக்குதல் என்று அறிவித்தனர்.

தாக்குதல் நடத்திவரின் அடையாளம் கண்டுடிக்கப்பட்டு அவரது விவரங்கள் வெளியிடப்பட்டது. இதன்படி மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 20 வயதேயான ட்ரிஸ் ஒபகீர் இந்தத் தாக்குதலை நடத்தினார் என்று தெரிவித்த ஸ்பானியப் பொலிஸார் தாக்குதல் தாரியின் ஒளிப்படத்தையும் வெளியிட்டனர். பார்சிலோனா நகரின் மற்றொரு இடத்தில் பொலிஸார் மீது நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டதுடன் அதை நடத்தத் திட்டமிடப்பட்ட தாக்குதல்தாரியும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்