சிறீலங்காவின் புதிய கடற்படை தளபதிக்கு வாழ்த்துதெரிவித்த சிறீலங்கா ஜனாதிபதி

சிறீலங்கா கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டமைக்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வரவேற்பளித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

“ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா, சிறீலங்காவின் கடற்படையில் பல தசாப்தங்களாக விசுவாசத்தோடு சேவையாற்றியுள்ளார். இன்று இவர் கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா இன்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறீலங்காவின் புதிய கடற்படை தளபதி தொடர்பில்…

விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்கும் நடவடிக்கைக்கு தலைமைதாங்கிய தமிழர் புதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை அழித்தொழிப்பதற்குத் தலைமைதாங்கிய றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா என்ற தமிழர் தற்போது கடற்படைகளின் தளபதியாக அடுத்த வாரம் நியமிக்கப்படவுள்ளார்.

தற்போது கிழக்குப் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதியாகச் செயற்படும் றியர் அட்மிரல் சின்னையா, மகிந்த ராஜபக்ஷ காலத்தில், அரசியல் பழிவாங்கல் காரணமாக நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றிருந்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு திரும்பிய அவர், கிழக்குப் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டு வருகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வரும் 22ஆம் நாளுடன் ஓய்வுபெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்