பதின்ம வயது மாணவிக்கு நடந்த கொடுமை!

தொடங்கொடை பிரதேசத்தில் தனியார் வகுப்புக்குச் சென்ற பதின்ம வயது மாணவி முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் மூவர் தொடர்புபட்டுள்ளனர் என்றும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடத்திய மூவரில் ஒருவர் தன்னை வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்று மாணவி பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். மாணவியை சந்தேகநபர்கள் பேருந்துத் தரிப்பிடம் ஒன்றில் இறக்கி விட்டுத் தப்பிச் சென்றனர் என்றும் கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவி களுத்துறை, நாகொடை மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகளுக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்