கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன் புதைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அகழ்வு பணிகள் நேற்று இடம்பெற்றது.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகத்துக்கு பின்புறமாக அகழ்வு பணிகள் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் இந்தத் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது.