தமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு? : சீமான்

தமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடக்கும் ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை தமிழக எதிர்க்கட்சிகள் இன்று மேற்கொண்டன. சென்னை விமான நிலையம் அருகே நடைபெற்ற கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய சீமான், தமிழர்களை கடலில் மூழ்கி சாகும்போதும், குரங்கணி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த போதும் காப்பாற்ற வராத ராணுவத்திற்கு எதற்காக சென்னையில் கண்காட்சி நடத்தப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், நீட் விவகாரம், காவிரி பிரச்னை, நியூட்ரினோ ஆய்வு மைய எதிர்ப்பு என தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருவதால், இந்தக் கண்காட்சியை நடத்தி மக்களை மிரட்டப்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று சொல்லும் முதல்வர், துணைமுதல்வர் இருவரும் கடந்த ஓர் ஆண்டில் தமிழர்களுக்காக சாதித்தது என்ன என்று சொல்ல முடியுமா என்றும் சீமான் கேள்வியெழுப்பி உள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 05-07-2019 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய வல்லாதிக்கமும், சிங்களப்
இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால்
மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்