யாழ் குருநகர் கடற்பகுதியில் இரு மீனவர்கள் மாயம்!

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றதாகவும் இதுவரையில் கரைக்குத் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர்கள் சென்ற படகு மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் இருவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த மீனவர்களின் உறவினர்கள் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளை கடற்பரப்பில் வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வடக்கு கடற்பகுதியில்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களை சிறீலங்கா கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்