இதே நிலமை தொடர்ந்தால் நல்லிணக்கம் வராது-சிவாஜிலிங்கம்

வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மகாவலி எல் வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து, ‘மாயபுர” என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.

இதன் மூலம் கடந்த காலங்களில் சிங்கள அமைச்சர்களினால் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்கள் தமிழ் மக்களிற்கு வழங்கப்படவேண்டும். இதேபோல மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழ் தொழிலாளர்களது கடற்கரைகளை வழங்க மறுத்து அவர்களுடைய இடங்களிலே சிங்கள தொழிலாளர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான அனுமதி இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான சம்பவங்களே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இப்பிரச்சினைகளை அரசு கைவிடும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் தேசிய நல்லிணக்கத்தினையோ அல்லது வேறு எதனையும் ஏற்படுத்த முடியாதெனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நல்லாட்சி அரசு என்று பெயர் சூட்டி கொண்டாடிய நாம் இதுவரையான நான்கு ஆண்டுகளில் அந்த
தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத சர்வதேசம் தற்போது இந்த ஜனநாயகம் பறிபோய்விட்டது என கூறுவது வேதனையளிக்கின்றது என முன்னாள்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது

About இலக்கியன்

மறுமொழி இடவும்