புலிகளின் புலனாய்வுப் பிரிவு ‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை!

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ், கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

தற்போது தடுப்புக்காவலில் உள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்.

பருத்தித்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த மொறிஸ், இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கேற்றவர்.

இவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று மூத்த சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள் சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்குத் தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல் துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் கொடி மற்றும், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேர்நேற்று

About இலக்கியன்

மறுமொழி இடவும்