வவுனியா வடக்கில் உபதவிசாளராக பெரும்பான்மையினத்தவர் போட்டியிட்ட நிலையில் கூட்டமைப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி ஆதரவு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியியும் வாக்களித்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நா. யோகராஜா 14 வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. யோகராஜா போட்டியிட்டிருந்தார். அவரை எதிர்த்து மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் காமினி விக்கிரம்பால போட்டியிட்டிருந்தார்.

இந்நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்ப் பிரதேசங்களில் பெரும்பான்மை உறுப்பினர் ஒருவர் போட்டியிட்டால் அவரை எதித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னர் குறிப்பிட்டிருந்தது. அதற்கேற்ப தவிசாளர் தெரிவில் நடுநிலமை வகித்த தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் உப தவிசாளர் தேர்விற்காக மகிந்த அணியிலிருந்து ஒருவர் களமிறக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உபதவிசாளர் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 03, ஐக்கிய தேசியக் கட்சியின் 02, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி ஒரு உறுப்பினரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நா. யோகராஜா 14 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் காமினி விக்கிரம்பாலவிற்கு ஆதரவாக பொதுஜன பொரமுனவின் 05 உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினரும் என 6 பேர் வாக்களித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்