சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும், கேணல் ஷு ஜியான்வெய்யும் கலந்து கொண்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்