ஒட்டுசுட்டானில் சிவன் ஆலயத்தை இடித்து இராணுவம் பௌத்த விகாரை அமைப்பு!

ஒட்டிசுட்டான் கற்சிலைமடுப்பகுதியில் ஒரு ஏக்கர் தனியார் காணியில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ் ஆலயத்தின் சான்றுப் பொருட்களை அழித்துள்ளதுடன் அப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றினை இராணுவத்தின் 64ஆவது படைப்பிரிவினர் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருவதாகவும் இவ்விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாக காணியின் உரிமையாளர் கந்தையா சிவராசா சமாதான நீதவான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது, கற்சிலைமடுப்பகுதியில் பரம்பரையாக வசித்து வருகின்றேன். 1921ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உறுதிக்காணி யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் இராணுவம் எனது காணியை கைப்பற்றி இராணுவ முகாமினை அமைத்துள்ளது எனது காணிக்குள் மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று அமைந்திருந்தது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட எனது காணியிலிருந்த சிவன் ஆலயத்தை பைக்கோவினால் உடைத்து தடைமட்டமாக்கியதுடன் அதில் ஆலயம் இருந்தவற்றுக்கான தடயங்களையும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

அப்பகுதியில் காணப்பட்ட வெள்ளரசு மரத்தடியில் பௌத்த விகாரையை அமைத்துள்ளனர். 2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அப்பகுதியைச்சுற்றி 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது எனினும் கடந்த 2013ஆம் ஆண்டு புராதன திணைக்களத்தில் (தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தில்) பாரப்படுத்தப்பட்டுள்ளது. அதேவருடம் 6ஆம் மாதம் வர்த்தகமானியில் புராதன திணைக்களத்திற்குச் சொந்தமானதாக பகுதியாக குறித்த எனது காணியினை அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதேவேளை தற்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு செல்லும் வீதியிலுள்ள 64ஆவது படைப்பிரிவு நிறைய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன் பழமைவாய்ந்த புராதனக்கல்லுகளை எடுத்துவந்துள்ளதுடன் புத்தர் சிலையை முன்பக்கத்தில் நிறுத்தி அப்பகுதியில் தொடர்ந்து திட்டமிடப்பட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக புராதனத்திணைக்களத்திடம் வினவியபோது அது புராதன திணைக்களத்திற்குரிய பகுதி எனவும் தெரிவித்துள்ளதுடன் வேறு எவரையும் அப்பகுதியிற்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். கடந்த 1921ஆம் ஆண்டு உறுதி எழுதப்பட்டுள்ளது 1960ஆம் ஆண்டு எழுதப்பட்ட வரைபடத்தில் இந்து ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், இந்து கலாச்சார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். இவ்வளவு காலமாகவும் ஏன் இவற்றைக்கண்டு பிடிக்கவில்லை புராதன திணைக்களம் எனவும் காணி உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இது திட்டமிடப்பட்டு அப்பகுதியிலிருந்த சிவன் ஆயலத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ்விடத்திலிருந்த தடயங்களையும் அகற்றி அப்பகுதியில் பௌத்தவிகாரை ஒன்றினை அமைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான லீனஸ் வசந்தராசாவிடம் கேட்டபோது, தொடர்புபட்ட இராணுவம், புராதன திணைக்களத் தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு இடம்பெற்று வருகின்றது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் காணி உரிமையாளர் வழங்கிய முறைப்பட்டையடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்