அரசியலில், பெண்கள் என்றால் பயம் – அனந்தி

தேர்தலில் வெற்றிப் பெறும் பெண்களை கண்டால் அரசியல் தலைமைகள் தமது ஆசனம் பறிபோய்விடும் என்ற பயத்துடன் இருப்பதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சிக்கன கடன் கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மக்களுக்கான சேவையில், தனித்து நின்று செயற்பட முடியாது எனவும், வடக்கின் அபிவிருத்தியை மத்தியே அரசாங்கமே தீர்மானிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழர் கலாசாரத்தை மீறிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முடியாது எனவும், உண்மையாகவும் விசுவாசமாகவும் நேர்மையாகவும் மக்களுக்கு சேவை செயய கடமைபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு புனர்வாழ்வு அமைச்சர் என்ற வகையில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என அமைச்சர் சுவாமிநாதனிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தான் ஒரு அரசியல் போராளியாக இருக்க முடியுமே தவிர அரசயில்வாதியாக இருக்க முடியாது என தெரிவித்த அவர், வெற்றயீட்டிய பெண்களை தூக்கியெறிய வேண்டும் அவர்களை ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு தற்போது நிலவுவதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

தங்களுடைய ஆசனம் அடிபட்டுப் போய்விடும் என்பதனால், வெற்றியீட்டும் பெண்கள் என்றால் அரசியல் தலைமைகளுக்கு பயம் என தெரிவித்த அவர், அதனால் மௌனமாக இருந்து தலையாட்டும் பெண்களை அரசியலுக்குள் கொண்டு வர அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்