போர் பதற்றம்.. இந்திய இராணுவப் படையில் அதி நவீன அமெரிக்க ஹெலிகப்டர்கள்

இந்திய இராணுவப் படைக்கு 6 அதி நவீன ஹெலிகப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று டெல்லியில் இடம் பெற்ற இராணுவ அமைச்சகத்தின் கூட்டத்தின் போது, அமெரிக்காவிடம் இருந்து 4168 கோடி ரூபா இந்திய மதிப்புடைய ஏ.எச்.64இ ரக அப்பாச்சி ஹெலிகப்டர்களும், ரஷ்யாவிடம் இருந்து 2 கியாஸ் டர்பைன் கப்பல் என்ஜின்களும் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து இராணுவ உயர் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்ற சூழல் காரணமாக இந்த ஹெலிகப்டர்கள் இராணுவத்திற்கு மிக அவசியமாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இரவு நேரத்திலும் தாக்குதல் நடத்தக் கூடிய வகையில் நவீன ஆயுதங்களுடன் கூடிய இந்த ஹெலிகப்டர்கள் முதன் முறையாக இந்திய இராணுவப்படையில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன என இராணுவத் தரப்பு மேலும் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்