உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு!

யாழ்ப்பாண மாவட்டம் கரணவாய் வடக்கு, கரணவாய் என்ற முகவரியைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், 6ஆம் வட்டாரம் வேலணை மேற்கு, வேலணையைச் சேர்ந்த இராசதுரை திருவருள் ஆகியோர் உட்பட இன்னும் சில தமிழ் இளைஞர்களுக்கு எதிராகவும் சித்திரவதைகள் மூலம் அவர்களிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் கடந்த 2013.07.15 அன்று வவுனியா மேல் நீதிமன்றில் சுலக்சன் (வழக்கு இல: 2491ஃ2013), இராசதுரை திருவருள் (வழக்கு இல.2491ஃ13 ஆகியோருக்கு எதிராக அரச தரப்பினால் வழக்குததாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கின் சாட்சிகள் ஒவ்வொரு தவணைகளுக்கும் சமூகமளித்தபோதும் ஒவ்வொரு தடவையும் அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் தோன்றி சட்டமா அதிபர் இந்த வழக்கை விசாரணை செய்ய தற்போது தயாராக இல்லை என்று கூறியதால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாது இன்றுவரை நான்கு ஆண்டுகளாக வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்பட்டு வந்தது.

தற்போது அவர்களது வழக்கை அவர்களதும், அவர்களது குடும்பத்தினரதும் விருப்பத்திற்கு மாறாக வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அல்லது அனுராதபுரத்துக்கு மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றது என்றும் மேற்படி கைதிகளின் குடும்பத்தினர் எம்மிடம்; தெரிவித்துள்ளனர்

குறித்த கைதிகளின் குடும்பத்தினர் மோசமான பொருளாதாரக் கஸ்ரத்துக்கு முகம்கொடுத்துக் கொண்டு வாழ்வதனால் அடிக்கடி வவுனியாவுக்கோ அல்லது அனுராதபுரத்திற்கோ சென்று தமது சொந்தங்களைப் பார்வையிடுவதற்கும் அல்லது அவரது வழக்கு நடவடிக்கைகளை கவனிப்பதற்கும் முடியாத நிலையில் உள்ளதாகவும், வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டால் அங்கு சட்டத்தரணிகளை நியமித்து வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க தம்மால் முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர்கள் மேலும் எம்மிடம் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் விரக்தியடைந்துள்ள தமது சொந்தங்கள் கடந்த 1ஆம் திகதி நீதிமன்றின் நீதிபதி முன்னிலையில் இவ்வழக்கை தென்பகுதிக்கு மாற்றுவதாக இருந்தால் தாம்; சாகும் வரையில் உணவு தவிர்ப்பில் ஈடுபடப்;போவதாக தெரிவித்துள்ளார்கள் ஆகவே குறித்த வழக்கை தென்பகுதிக்கு மாற்றக் கூடாது என்றும் இவ்வழக்கை வவுனியா நீதிமன்றிலேயே நடாத்த வேண்டும் என்றும் வேறு நீதிமன்றுக்கு மாற்றுவதாக இருந்தால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு மாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்மிடம் அவரகள்; தெரிவித்தார்கள்.

எனவே மதியரசன் சுலக்சன், இராசதுரை திருவருள் உள்ளிட்ட அரசியல் கைதிகள் தமது வழக்குகள் தென்பகுதிக்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 21ஆம் திகதி முன்னெடுக்கவுள்ள உணவுத் தவிர்ப்பு போராட்டத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்ä-ö.

About இலக்கியன்

மறுமொழி இடவும்