வவுனியா பாலமோட்டையில் யானை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பாலமோட்டை, ஊரல்குளத்தில் யானை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்த ஊர் மக்கள் ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனை அடுத்து ஓமந்தை பொலிஸாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் சம்பவ இடத்துக்கு சென்றதுடன், வன ஜீவராசிகள் திணைக்கள வைத்திய அதிகாரியால் யானை இறந்தமைக்குரிய காரணம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ் மருத்துவ அறிக்கையின் படி ஐந்து வயதுடைய யானை வெங்காய வெடியினை உண்டதனால் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக உணவு உண்ண முடியாமல் இறந்துள்ளது என தெரிவித்தார்.

இவ் யானை 7 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என தெரிய வருவதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன்
கட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாததால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கலாம் என
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள், விடுவிக்கப்படாமல் உள்ள தமது

About இலக்கியன்

மறுமொழி இடவும்