யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலக தொழிலாளர் தினம்

போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தொழிலாளர்கள் தினமான நேற்று ,
சுதந்திரம் வேண்டிப் போராடும் தமிழீழ மக்களும் பல்லின மக்களுடன் இணைந்து தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். பல்வேறு நகரங்களில் நடைபெற்ற பேரணிகளில் தமிழ் மக்களும் இணைந்து தாயகத்தில் எமது உறவுகள் முகம் கொடுக்கும் கட்டமைப்புசார் இனவழிப்பை பதாதைகளின் ஊடாக வெளிப்படுத்தியதோடு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற இனவழிப்புக்கு நீதி கோரி யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

உலக சமாதானத்துக்காக 50 நாடுகளை கடந்து தனது மரதன் ஒட்டத்தை மேற்கொள்ளும் கனடாவாழ் ´மனிதவுரிமை பணியாளர் சுரேஷ் அவர்களும் பேர்லின் நகரில் நடைபெற்ற தொழிலாளர் தினத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார். சுரேஷ் அவர்களின் மனிதநேய செயற்பாட்டுக்கு தமிழ் இளையோர்கள் தமது முழுமையான ஆதரவை நல்கினார்கள். சுரேஷ் அவர்களின் உலக சமாதானத்துக்கான பயணம் யேர்மனியில் ஹம்பூர்க் , பேர்லின் நகரங்களை தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை பிராங்பேர்ட் நகரை சென்றடைய உள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்