தனி­நாட்டு கோரிக்­கை­யின் தேவை தணி­ய­வில்லை!!

தமி­ழீ­ழக் கோரிக்­கையை, தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கைவிட்­டு­விட்­டோம் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பகி­ரங்­க­மாக அறி­வித்­து­விட்ட நிலை­யி­லும், தொடர்ந்து அந்­தக் கருத்தை ஆணித்தரமாக வலி­யு­றுத்தி, ஒரு­மித்த, பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத நாட்­டுக்­குள் ஒரு தீர்­வைக் காண்­பதே தமது குறிக்­கோள் என்று பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ள நிலை­யி­லும், தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைத் தமி­ழர்­கள் இன்­றைய நிலை­யில், கைவிட்­டு­வி­டக் கூடாது என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன.

தமி­ழ் அரசுக் கட்­சி­யின் நிறு­வு­ன­ரும் ஈழத்­தின் காந்தி என அழைக்­கப்­ப­டு­ப­வ­ரு­மான தந்தை செல்­வா­வின் 41ஆவது நினைவு தின நிகழ்வு நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்­ற­போது கரு­ணா­ரத்ன இந்­தக் கருத்தை வலி­யு­றுத்­தி­னார்.

தமது ஆதிக்­கத்­தின் கீழே­தான் மற்­ற­வர்­கள் அடி­ப­ணிந்து செயற்­ப­ட­வேண்­டும் என்ற நோக்­கோ­டு­தான் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் எப்­போ­துமே இயங்­கு­கி­றார்­கள் என்­ப­தால், தமி­ழர்­கள் தமது தமிழ் அர­சுக்­கான தனி­நாட்­டுக் கோரிக்­கையை விட்­டுக்­கொ­டுக்­கக் கூ­டாது என்­பது அவ­ரது வாதம்.

விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன சிங்­க­ளத் தலை­வர்­கள் மத்­தி­யில் நேர்­மை­யும் துணிச்­ச­லும் கொண்ட ஒரு­வர். தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னையை தமி­ழர்­க­ளின் பக்­க­மி­ருந்து பார்க்­க­வும் உய்த்­து­ண­ர­வும் கூடிய பக்­கு­வம் கொண்­ட­வர்.

நீண்ட கால­மா­கவே தமி­ழர்­க­ளின் உரி­மை­க­ளுக்­காக வெளிப்­ப­டை­யா­கக் குரல் கொடுத்து வரு­ப­வர். பௌத்த, சிங்­கள பேரி­ன­வா­தத்­திற்­குள் சிக்­குண்­டுள்ள பெரும்­பான்மை மக்­க­ளின் வாக்கு ஆத­ர­வைக் கொண்­டி­ருக்­கா­த­வர் என்­கி­ற­போ­திலும், நாட்­டின் அர­சி­யல் குறித்­துத் தீர்க்­க­மான பார்­வை­யு­டைய மிகச் சொற்­ப­மான சிங்­க­ள­வர்­க­ளில் ஒரு­வர் என்று குறிப்­பிட்­டுக்­கூ­றக்­கூ­டி­ய­வர். சிங்­க­ளப் பேரி­ன­வா­தக் கூறு­க­ளைப் பற்­றிய நுட்­ப­மான அறி­வு­டை­ய­வர்.

இன்று இருக்­கும் அர­சி­யல் கள­நி­ல­வ­ரத்­தைப் பொறுத்­த­வரை தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைத் தமி­ழர்­கள் கைவிட்­டு­வி­டக்­கூ­டாது என்று அவர்­தான் கூறு­கின்­றார். அதா­வது, பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத ஒரு­மித்த நாட்­டுக்­குள் கூட்­டாட்­சித் தீர்வு என்று என்­ன­தான் தமி­ழர்­கள் காட்­டுக் கத்­தல் கத்­தி­னா­லும், சிங்­க­ளப் பெரும்­பான்­மை­வாத ஆட்­சி­யா­ளர்­கள் அதைப் பொருட்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை, அத்­த­கைய ஒரு தீர்­வைத் தரப்­போ­வ­து­மில்லை என்­ப­தைத்­தான் அவர் குறிப்­பி­டு­கின்­றார்.

சிங்­க­ள­வர்­க­ளி­டம் மனோ­நிலை மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை என்­பதை அவர் இடித்­து­ரைக்­கின்­றார். அத்­த­கைய மாற்­றம் ஒன்று ஏற்­ப­டாத வரைக்­கும் பிரிந்து செல்­வ­தைத் தவிர தமிழ் மக்­க­ளுக்கு மாற்­றுத் தீர்வு ஒன்று இல்லை என்­ப­தைச் சொல்­கி­றார்.

சிங்­க­ள­வர்­க­ளின் இந்­தப் போக்­குக் குறித்து, ஜன­நா­யக மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் மனோ கணே­சன்­கூட அண்­மை­யில் இது­போன்­ற­தொரு கருத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார். தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கூட்­ட­மைப்­புக் கைவிட்­டு­விட்­ட­மை­யைச் சிங்­க­ள­வர்­கள் மதிக்­க­வே­யில்லை, கணக்­கில்­கூட எடுத்­துக்­கொள்­ள­வில்லை என்று அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

உண்­மை­யும் அது­தான். தனி­நாடு வேண்­டும் என்று கேட்ட தமி­ழர்­கள் ஆயு­தப் போரில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தன் பின்­னர், தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கைவிட்­ட­மை­யைச் சிங்­க­ளத் தலை­வர்­க­ளும் சமூ­க­மும் மதிக்­க­வே­யில்லை.

போரில் தமி­ழர்­க­ளைத் தோற்­க­டித்­த­தால்­தான் அவர்­கள் தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கைவிட்­டார்­கள் என்­றும், வாய்ப்­புக் கிடைத்­தால் மீண்­டும் அது­போன்­ற­தொரு பிரி­வி­னைக் கோரிக்­கையை அவர்­கள் முன்­னெ­டுப்­பார்f­கள் என்­றும் அச்­சப்­ப­டு­கின்­றார்­கள்.

கூட்­டாட்­சித் தீர்வு ஒன்றை நோக்கி முன்­னே­று­வது என்­பது தமி­ழர்­க­ளுக்­குத் தனி­நாட்­டைப் பிரித்­துக்­கொ­டுப்­ப­தற்­கான முயற்­சி­தான் என்று கரு­து­கின்­றார்­கள். அத­னா­லேயே தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரத்­தைப் பிரித்­துக் கொடுப்­ப­தற்­குத் தயங்­கு­கி­றார்­கள்.

தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கைவி­டு­வ­தாக, பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் வலி­யு­றுத்­த­லைத் தொடர்ந்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பகி­ரங்­க­மாக அறி­வித்த பின்­னர்­கூட ,சிங்­க­ள­வர்­க­ளின் அச்­சம் நீங்­க­வில்லை. அந்த அச்­சம் நீங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் இல்லை என்­ப­தை­யும் அதற்­கான கார­ணத்­தை­யும்­தான் சொல்­லி­யி­ருக்­கி­றார் கலா­நிதி விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன.

தமிழ் அர­சி­யல் கட்­சி­கள் முக்­கி­ய­மா­கக் கவ­னத்­தில் கொள்­ள­வேண்­டி­ய­தொரு கருத்து இது. தனி­நாடு பற்­றிப் பேசு­வதே பாவம் என்­கிற நிலையை எட்­டி­விட்ட தமிழ்க் கட்­சி­கள் அனைத்­துக்­கும் இது கசப்­பான செய்­தி­தான் என்­றா­லும், தமது அர­சி­யல் பாதையை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டிய கட்­டா­யத்­தில் அவை உள்­ளன என்­பதை உணர்த்­திச் சென்­றி­ருக்­கின்­றது விக்­கி­ர­ம­பா­கு­வின் பேச்சு.

About இலக்கியன்

மறுமொழி இடவும்