இயக்கச்சியில் இராணுவத்திற்கு தண்ணீர் தடை!

இயக்கச்சி பிரதேசத்தில் இராணுவ தரப்பினரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த ஜந்து கிணறுகளும் பிரதேச சபையிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று செயலகமண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
மேலும் இயக்கச்சி பிரதேசத்தில் இராணுவ தரப்பினரின் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த ஜந்து கிணறுகளும் பிரதேச சபையிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அக்கிணற்றில் இருந்து பெறப்படும் நீரினை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்கவும் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை முகமாலை இந்திராபுரம் பகுதியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதியை உரிமையாளர்களிடம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது..
கரந்தாய் பகுதியில் தென்னை ஆராய்ச்சி நிலையம் இயங்கி வந்த காணியை உரியவர்களிடம் வழங்க நிலா அளவைத் திணைக்களத்திடம் வழங்கி அளவீடு செய்ததன் பின்பு காணி உரிமையாளர்களிடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்