பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவகமாக அறிவிக்கப்பட்டது அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவு எனக் கூறியுள்ளார்.
மேலும், பதவியைக் காக்க வியாபார நோக்குடன் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அணிகள் இணைப்பு, நினைவு இல்ல அறிவிப்பால் பின்னடைவு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், கட்சியின் நலனுக்காக விரைவில் அறுவை சிகிச்சை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.