நினைவேந்தல் வாரத்தில் மறைமுக அச்சுறுத்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

தீபமேந்திய ஊர்தியினை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் ஊர்தியில் அஞ்சலி செலுத்தியவர்களையும் அவ்விடத்திற்கு வந்தோரையும் தமது கையடக்கத்தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்தனர்.

இதனால் சற்று பதற்றத்துடன் மக்கள் அஞ்சலி செலுத்தியதுடன் குறித்தநபர்கள் மீதான அச்சத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தயங்கி நின்றனர்.

யுத்தம் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து நல்லாட்சி நிலவுகின்ற போதிலும் நல்லாட்சி அரசிலும் இவ்வாறு இனந்தெரியாதவர்களின் அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்
ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு
தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*