வடக்கில் முழுக்கம்பத்தில் பறக்கிறது வடமாகாண பேரவை செயலக கொடி

இலங்கையில் 30 வருடங்களாக நடைபெற்ற ஆயுதப் போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் ஒன்பது வருடங்களாகின்றன.

இதைமுன்னிட்டு இன்று “வடமாகாண சபையின் அனைத்து பாடசாலைகளிலும், மாகாண சபையின் கொடியினையும் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு” வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் இவரது கோரிக்கையை ஏற்காமல் வடமாகாண பேரவை செயலகத்தின் கொடி மற்றும் தேசியக் கொடி இன்று காலை முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

“எமது மக்களின் அபிலாசைகளை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனமாக வடக்கு மாகாணசபை திகழ்வதால், எமது மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும். அத்துடன், அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் இவரது கோரிக்கையை ஏற்காமல் வடமாகாண பேரவை செயலகத்தின் கொடி முழுக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்