பிறந்த சிசுவை வீதியில் வீசிய பெண்!

தாயாக இருக்க விருப்பமில்லை என்பதால் பிறந்த குழந்தையை சாலையில் அனாதையாக விட்டு சென்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் கல்லூரி மாணவியான இவர் பகுதி நேர வேலையும் செய்து வருகிறார்.

இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வீட்டின் சமையலறையிலேயே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து குழந்தையை நடுஇரவில் வீட்டின் வெளியில் எடுத்து வந்து இரக்கமின்றிச் சாலையில் வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

ஆறு மணி நேரம் வெறும் உடலோடு சாலையில் இருந்த குழந்தையை எறும்புகள் அதிகமாக கடித்துள்ளது.

அந்தவழியாக சென்ற ஒருநபர் குழந்தையை மீட்டு பொலிஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்