சிறுமி மீது பாலியல் முறைகேடு புரிந்தவந்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல மாதங்களாகக் குறித்த சிறுமி முறைகேட்டுக்கு உள்ளாகி வந்துள்ளார் என்று கிடைத்த தகவலின்படி 3 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட அவர்கள் விசாரணையின் பின்னர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். விசாரணையின் பின்னர் 3 பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்று நேற்று உத்தரவிட்டது. மேலதிக விசாரணை தொடர்வதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.