சன் சீ கப்பல் விவகாரம்;தமிழருக்கு 18 வருட சிறை?

சன் சீ கப்பலில் ஆட்களைக் கடத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழிருக்கு 18 வருட சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என கனேடிய சட்டத்துறை கோரியுள்ளது.

தாய்லாந்தில் இருந்து 492 இலங்கை தமிழர்களுடன் சட்டவிரோத பயணத்தில் ஈடுபட்டிருந்த ‘சன் சீ’ என்ற கப்பல் 2010 ஆண்டு கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாவில் நங்கூரமிட்டது.

இந்த ஆட் கடத்தலுடன் தொடர்பு கொண்டவர் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பயணியாக அந்த கப்பலில் பயணித்த குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கு முன்னதாக தண்டனை வழங்கப்பட்டது.

எனினும், அதனை ஆட்சேபித்து, அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளின் முடிவிலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே 6 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், தீர்ப்பு வழங்கப்பட்டால் மேலும் 11 வருடங்கள் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி
மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்