இந்திய இராணுவ அதிகாரி தனது சகாவுக்கு கோப்பாயில் அஞ்சலி!

இந்தியாவின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் நேற்று கோப்பாயில் அமைந்துள்ள தனது சகாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நான்கு நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் தலைமையிலான குழுவினர், இன்று யாழ்.படைகளின் தலைமையகத்துக்கு வந்திருந்தனர்.

இதன்போது, கோப்பாயில் அமைந்துள்ள இந்திய இராணுவ அதிகாரி ஒருவரின் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு, இந்திய இராணுவத்தினர், யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட ஒப்பரேசன் பவான் நடவடிக்கையின் போது, கோப்பாய் தெற்கில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்திய இராணுவ அதிகாரியின் நினைவிடத்திலேயே இவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிசுடன் பணியாற்றிய இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் இந்தச் சண்டையில் மரணமாகியிருந்தார்.

அவரது நினைவிடத்திலேயே, லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் , மேஜர்ஜெனரல் வி.கே.சிங், கேணல் கௌசல் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர், சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்