கருணாநிதியை சந்தித்த திருமாவளவன்!

திமுக தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து, மாநில சுயாட்சி மாநாடு தொடர்பான அழைப்பிதழை வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் செப்டம்பர் 17-ம் திகதி மாநில சுயாட்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வுபெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை திருமாவளவன் இன்று சந்தித்தார். அப்போது, மாநில சுயாட்சி மாநாட்டு அழைப்பிதழ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “இந்த மாநாட்டில் இடதுசாரி கட்சி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கேரளா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களை அழைக்க திட்டமிட்டுள்ளோம். தமிழக அரசியலில் இந்த மாநாடு திருப்பு முனையாக அமையும்” என்று தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்