நாட்டு மக்களுக்கு – அவசர எச்சரிக்கை!!

நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற மழை மற்றும் வெள்ள நிலைமையுடன், திடீர் விபத்துக்கள் மற்றும் நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக வெள்ளம் நிலவும் பிரதேசங்களுக்கு சிறுவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டாமென்று சுகாதாரப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

காய்ச்சல், இருமல் மற்றும் உடம்பில் கொப்பளங்கள் போன்ற நோய் குணங்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் திருமதி பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.

கழிவுப் பொருள்களை உரிய முறையில் அகற்றுதல் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்கள், பொலித்தீன் வகைகளையும், சுற்றாடல் பகுதியில் வீசி எறிவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்