ஊருக்குள் படையெடுக்கும் பாம்புகள்- அச்சத்தில் மக்கள்!!

ஏறாவூர் நகரப் பிரதேசத்துக்குள் நச்சுப் பாம்புகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளதால், மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள வடிகானுக்குள் பாம்புகள் நுழைந்துள்ளதாகப் பரவிய தகவலை அடுத்து, அந்தப் பகுதியில் மக்கள் நடுங்கத் தொடங்கினர்.

தகவல் அறிந்த ஏறாவூர் நகர சபையினர், பிரதேச பொதுமக்களுடன் குறிப்பிட்ட வடிகான் பகுதிக்குள் பாம்புகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். பாம்பொன்றை மீட்டு கொன்றனர்.

எனினும் இன்னமும் அந்தப் பகுதியில் பாம்புகள் நடமாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து. மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்