அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நால்வர் சிறிலங்காவில் ஆய்வு

அமெரிக்கா செனட் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ளது. செனட் சபையின் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் நால்வரே சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் சிறிலங்கா அரசாங்க பிரதிநிதிகளுடன், முக்கிய பேச்சுக்களை நடத்துவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க செனட்டின் பாதுகாப்புக் குழுவைச் நேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொழும்பு வந்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்