முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு!

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர். மூன்று குழந்தைகளின் தந்தையான கே.ஜெயகுமார் என்பவருக்கே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தின் 2ஆம் தளத்துக்கு வருமாறு, கடந்த 21 ஆம் திகதி அவருக்கு அழைப்பு விடுக் கப்பட்டுள்ளது.

ஒரு கால் அகற்றப்பட்ட அவர், கடந்த 2010 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் புனர் வாழ்வு நடவடிக்கைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது கிளிநொச்சியில் வசித்துவரும் ஜெயகுமார், உள்ளுர் சந்தையில் மரக்கறி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். அத்துடன், அவர் மாவட்ட வர்த் தக சங்கத்தின் தலைவராகவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் அங்கத்த வராகவும் உள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்